செய்திகள்

உதவி இயக்குநர் வேலைக்கு 24 மணி நேரத்தில் 1000 பேர் விண்ணப்பம்: பெண் இயக்குநர் ஆச்சர்யம்

உதவி இயக்குநர் வேலைக்கு 24 மணி நேரத்தில் 1000 பேர் விண்ணப்பித்ததாக இயக்குநர் மதுமிதா கூறியுள்ளார்.

DIN


உதவி இயக்குநர் வேலைக்கு 24 மணி நேரத்தில் 1000 பேர் விண்ணப்பித்ததாக இயக்குநர் மதுமிதா கூறியுள்ளார்.

வல்லமை தாராயோ, கொல கொலயா முந்திரிக்கா, கே.டி. உள்ளிட்ட 4 படங்களையும் ஒரு இணையத் தொடரையும் இயக்கியுள்ளார் மதுமிதா. 

தான் அடுத்து இயக்கும் படத்துக்கு உதவி இயக்குநர், இணை இயக்குநர் தேவை என ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்தப் படம் சென்னையில் படமாக்கப்படவுள்ளது. தமிழ் பேசத் தெரிந்தவர்கள் (எழுத, படிக்கத் தெரிந்திருப்பது கூடுதல் தகுதி) விண்ணப்பத்தை நிரப்பி எனக்கு அனுப்பவும் என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் ஒரு நாள் கழித்து ட்விட்டரில் அவர் தெரிவித்திருப்பதாவது:

வாவ்... 24 மணி நேரத்துக்குள் எங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி. இனிமேல் விண்ணப்பம் அனுப்ப வேண்டாம். விண்ணப்பத்தைப் பரிசீலிக்கக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்!

பருவமழை தீவிரம்: அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் மீண்டும் ஆய்வு!

சொல்லப் போனால்... ஊழல் ஒழிப்பும் பிஎம்டபிள்யூ கார்களும்!

பிகாா் தோ்தல்: ஜாதி ரீதியில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை -காவல் துறை எச்சரிக்கை

வெள்ள நீரில் மூழ்கிய வெளிதாங்கிபுரம் தரைப்பாலம் ஆபத்தை அறியாமல் செல்லும் பள்ளி மாணவிகள்

SCROLL FOR NEXT