செய்திகள்

மனைவியாக இருக்க மாதம் ரூ.25 லட்சம் - நடிகையிடம் பேரம் பேசிய தொழிலதிபர் - அதிர்ச்சி சம்பவம்

மனைவியாக நடிக்க ரூ.25 லட்சம் சம்பளம் தருவதாக தொழிலதிபர் பேரம் பேசியதாக நடிகை நீது சந்திரா தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

மனைவியாக நடிக்க ரூ.25 லட்சம் சம்பளம் தருவதாக தொழிலதிபர் பேரம் பேசியதாக நடிகை நீது சந்திரா தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை, ஜெயம் ரவியுடன் ஆதி - பகவன் படங்களில் நடித்தவர் நீது சந்திரா. மாதவனுடன் இணைந்து இவர் நடித்த யாவரும் நலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நீது சந்திரா ஒரு பேட்டியில் ஒரு தொழிலதிபர் தன்னிடம் மனைவியாக இருக்க ரூ.25 லட்சம் தருவதாக தெரிவித்ததார் என கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் நான் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தும் வாய்ப்பில்லாமல் இருக்கிறேன் என்றும் எந்த இயக்குநரும் என்னைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தன்னிடம் பேரம் பேசிய தொழில் அதிபர் யார் என்பதை நீது சந்திரா தெரிவிக்க மறுத்துவிட்டார். 

நெவர் பேக் டவுன் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ள நீது சந்திரா, இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தம் செய் படத்தில் அமீருடன் இணைந்து இவர் நடனமாடிய கன்னி தீவு பொண்ணா பாடல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT