செய்திகள்

’சினிமா துறையில் நான் அநாதை...’ நடிகர் பார்த்திபன் உருக்கம்

DIN

சினிமாவில் தான் ஒரு அநாதை என நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘இரவின் நிழல்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இப்படம் உலகளவில் நான் லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம். அதனால், உருவான எதிர்பார்ப்பு காரணமாக சென்னையில் சில பகுதிகளில் இன்று அதிகாலை 4.30 மணி காட்சிகள் திரையிட்டப்பட்டன.  

அப்போது, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்களைச் சந்தித்த பார்த்திபன் “ இரவின் நிழலை படமாக எடுத்தபோது செத்துப் பிழைத்தேன். இன்று புதிதாக பிறந்துள்ளேன். உங்கள் ஒவ்வொருவரின் கைதட்டல்களுக்கும் நான் அடிமை. ஆஸ்கர் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த மாதிரி முயற்சிக்கு அரங்கம் நிறைந்த முதல்நாள் முதல் காட்சியை சத்தியமாக நினைத்துப் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட சினிமாவில் நான் ஒரு அநாதை. எனக்கு யாருமில்லை. நான் ரசிகர்களைத் தவிர யாரையும் நம்புவதில்லை. எந்தத் தயாரிப்பாளரையும்  திருப்திப்படுத்த படம் எடுக்கமாட்டேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT