செய்திகள்

மீண்டும் ஆத்ரேயாவாக சூர்யா - உருவாகிறது 24 படத்தின் இரண்டாம் பாகம்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 24 படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 24 படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூர்யா மூன்று வேடங்களில் நடித்த 24 படம்  கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. விக்ரம் குமார் இயக்கிய இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்திருந்தார். 

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது. டைம் டிராவல் முறையில் உருவான இந்தப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தும் தரப்பினரையும் கவர்ந்தது. 

இந்தப் படத்தில் ஆத்ரேயா என்ற எதிர்மறை வேடத்தில் நடிகர் சூர்யா மிரட்டியிருப்பார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் உருவாகவிருப்பதாக இயக்குநர் விக்ரம் குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சூர்யா ரசிகர்கள் இப்பொழுதே சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT