விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதியை களமிறக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். எல்ரெட் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இளம் பழங்குடியின இளைஞனாக நடிப்பதற்காக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதியை வெற்றிமாறன் தேர்வு செய்துள்ளாராம். சூர்யா விஜய் சேதுபதியின் நடிப்பு வெற்றிமாறனுக்கு பிடித்துப்போனதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் நானும் ரௌடி தான், சிந்துபாத் ஆகிய படங்களில் சூர்யா விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.