செய்திகள்

மீண்டும் இணைகிறது கமல்ஹாசன் - ஃபகத் கூட்டணி?

DIN

நடிகர் கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

‘விக்ரம்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படும் சூழலில் மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’ ‘சியூ சூன்’ மற்றும் ‘மாலிக்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

நடிகர்கள் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில் மற்றும் இயக்குநர் மகேஷ் நாராயணன்

இதனை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் நேர்காணலில் பேசிய இயக்குநர் மகேஷ் நாராயணன் கமல்ஹாசனுடன் இணைவதாகவும் அப்படத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பின், அந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில், ‘விக்ரம்’ படத்திற்குப் பின் கமல்ஹாசன் - ஃபகத் கூட்டணி மீண்டும் இணைய இருப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. 

மேலும்,  ஃபகத் ஃபாசிலும் சில நேர்காணல்களில் எதிர்காலத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பேன் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT