செய்திகள்

பிரபல நடிகருடன் திருமணமா? என்ன சொல்கிறார் நித்யா மேனன் ?

பிரபல நடிகருடன் திருமணம் என வெளியான செய்தி குறித்து நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். 

DIN


பிரபல நடிகருடன் திருமணம் என வெளியான செய்தி குறித்து நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். 

மலையாள நடிகர் ஒருவரை நடிகை நித்யா மேனன் விரைவில் காதல் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கடந்த இரு நாட்களாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் யார் அந்த நடிகர் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. 

இந்த நிலையில் தனக்கு திருமணம் என வெளியான தகவலை நடிகை நித்யா மேனன் முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய நித்யா மேனன், அந்தத் தகவலில் உண்மையில்லை. ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிடும் முன் அதன் உண்மை தன்மை குறித்து தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

நடிகை நித்யா மேனன் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 19(1)(ஏ) திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. நடிகர் இந்திரஜித்தும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்து.வி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

தமிழில் ஓகே கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யா மேனனுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடைசியாக தமிழில் மிஷ்கினின் சைக்கோ படத்தில் உதயநிதியுடன் நடித்திருந்தார். தற்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT