செய்திகள்

68வது தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகராக சூர்யா தேர்வு - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த சூரரைப் போற்று

DIN

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று (ஜூலை 22) அறிவிக்கப்பட்டுள்ளன. திரைப்பட தயாரிப்புக்கு சாதகமான சூழல் நிலவும் மாநிலமாக மத்திய பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது.  திரைப்படத்துறை தொடர்பான சிறந்த புத்தகமாக தி லாங்கஸ்ட் கிஸ் என்ற புத்தகத்துக்கு கிடைத்துள்ளது. 

சிறந்த தெலுங்குப் படமாக கலர் போட்டோவும், சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சனியும் சில பெண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  சிறந்த இசையமைப்பாளராக அல வைக்குந்தபுரமுலோ படத்துக்காக தமன் மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிக்க: சூர்யாவின் ‘சூரரைப் போற்று' விமர்சனம்: கனவுகள் விதைக்கும் பரவச அனுபவங்கள்!

சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக ஸ்ரீகர் பிரசாத் பெற்றார். சிறந்த தமிழ் படமாக சூரரைப் போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்கு கிடைத்துள்ளது.  சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. 

சிறந்த சண்டைப் படமாக மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த பொழுதுபோக்கு படமாக ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி படம் பெற்றுள்ளது.  சிறந்த நடிகருக்கான விருதை தன்ஹாஜி படத்துக்காக அஜய் தேவ்கனும் பெறுகிறார். சிறந்த பின்னணி பாடகிக்கான விருது அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக நஞ்சம்மா பெறுகிறார். சிறந்த இயக்குநராக அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக சச்சிதானந்தன் கே.ஆர் பெறுகிறார். சிறந்த துணை நடிகராக அய்யப்பனும் கோஷியும் பிஜு மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT