வினீத் தட்டில் 
செய்திகள்

கடன் கொடுத்தவரை அரிவாளால் வெட்டிய பிரபல நடிகர் கைது

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை ஆத்திரத்தில் வெட்டிய பிரபல மலையாள நடிகர் கைது செய்யப்பட்டார்.

DIN

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை ஆத்திரத்தில் வெட்டிய பிரபல மலையாள நடிகர் கைது செய்யப்பட்டார்.

பிரபல மலையாள நடிகரான வினீத் தட்டில் டேவிட்(45) அங்கமாலி டைரீஸ், ஜூன், தேசிய விருது பெற்ற அய்யப்பனும் கோஷியும், திருச்சூர் பூரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணைக் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் ஆழப்புழாவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை தனக்குத் தர வேண்டிய ரூ.3 லட்சத்தை உடனடியாக தர வேண்டும் என அலெக்ஸ் நடிகர் வினீத்திடம் நேரில் கூறியுள்ளார். பின், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வீனித் அரிவாளால் அலெக்ஸின் கைகளில் வெட்டினார்.

இதையடுத்து, கொலை முயற்சி வழக்கில் திருச்சூரில் வைத்து வினீத்தை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT