செய்திகள்

ஏகே 61: அஜித்துடன் இணையும் சஞ்சய் தத்?

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படங்களுக்கு பிறகு இயக்குநர் வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி இணைந்துள்ள படம் 'ஏகே 61'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கடந்த ஏப்ரல் -11 ஆம் தேதி பூஜையுடன் துவங்கியது. 

வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாகவும் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், தற்போது அப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் சமுத்திரகனி, ஜான் கேக்கன், வீரா உள்ளிட்டோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்கள் - வரலாறு, வழிபாடு, விழாக்கள்

எவரெஸ்டில் பனிப்புயல்: 1000க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு!

பழங்குடியின மக்களுக்காக..!” வாகன வசதிகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர்!

Typhoon Matmo!” China-வைத் தாக்கும் கோரப் புயல்! 3,50,000 பேர் இடமாற்றம்!

பூந்தளிர்... ஆஷு ரெட்டி!

SCROLL FOR NEXT