முகப்பு
செய்திகள்

வெந்து தணிந்தது காடு - சிம்பு வெளியிட்ட புதிய ’அப்டேட்’

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புதிய தகவல் ஒன்றை நடிகர் சிம்பு பகிர்ந்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
நடிகர் சிம்பு
பகிர்:

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புதிய தகவல் ஒன்றை நடிகர் சிம்பு பகிர்ந்துள்ளார்.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா என இரண்டு வெற்றிகளுக்கு பிறகு 3வது முறையாக இயக்குநர் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.

முன்னதாக, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது நடிகர் சிம்பு அப்படத்தில் தன்னுடைய ‘டப்பிங்’ பணிகள் முடிவடைந்துவிட்டன எனத் தெரிவித்துள்ளார்.

இப்படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →