படம்: டிவிட்டர்/ஹாரிஸ் ஜெயராஜ் 
செய்திகள்

‘என் உயிரின் உயிரே’: கே.கே. மரணம் குறித்து ஹாரிஸ் உருக்கம்

பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்து மரணம் குறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

DIN

பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்து மரணம் குறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

தெற்கு கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட கே.கே., அவர் தங்கியிருந்த அறையில் ஓய்வெடுக்க சென்றபோது உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“என் உயிரின் உயிரே மறைந்தது. அவருடைய கடைசிப் பாடலான “கொஞ்சி கொஞ்சி” பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இத்துடன் அவர்கள் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தமிழில் தொடர்ச்சியாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடிவந்த கே.கே., அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். அந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT