செய்திகள்

‘மின்சார கனவு முதல் தி லெஜண்ட் வரை’: கே.கே.வின் டாப் 10 தமிழ்ப் பாடல்கள்

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் டாப் 10 தமிழ் பாடல்கள்.

DIN

மின்சார கனவு முதல் தி லெஜண்ட் திரைப்படம் வரை பல்வேறு பிரபல பாடல்களை தமிழில் பாடியுள்ள பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்து செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

தெற்கு கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமாா் ஒரு மணி நேரம் பாடல்களைப் பாடிய கே.கே., நிகழ்ச்சி முடிந்த பிறகு அவா் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பியபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் 1997-ல் வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் தொடங்கி இம்மாதம் வெளியாகவுள்ள தி லெஜண்ட் வரை 50க்கும் மேற்பட்ட பிரபல பாடல்களை கே.கே. பாடியுள்ளார்.

கே.கே.வின் டாப் 10 தமிழ் பாடல்கள்

1997 - ஸ்ட்ராபெரி கண்ணே(மின்சார கனவு)

2002 - ஒல்லிக்குச்சி உடம்புகாரி(ரெட்)

2003 - குண்டு குண்டு குண்டு பெண்ணே(தூள்)

2003 - உயிரின் உயிரே(காக்க காக்க)

2004 - அப்படி போடு(கில்லி)

2004 - நீயே நீயே(எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி)

2004- காதல் வளர்த்தேன்(மன்மதன்)

2005 - ஒரு வார்த்த கேட்க(ஐயா)

2008 - மொல மொலன்னு(குருவி)

2011 - என் வெண்ணிலவே(ஆடுகளம்)

இறுதியாக ஜூலை மாதம் தமிழில் வெளியாகவுள்ள ‘தி லெஜண்ட்’ படத்தில் கே.கே. இரண்டு பாடல்களை பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!

சொல்லப் போனால்... பிரதமர் பேச்சும் புலம்பெயர் வாழ்வும்!

வில்லியம்சன் விடைபெற்றார்.. சர்வதேச டி20-ல் ஓய்வு!

பிரசாந்த் கிஷோர் கட்சித் தொண்டர் கொலை! ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் பிரபல தாதா கைது!

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT