படம் : டிவிட்டர், வெரைட்டி | ஷாங்காய் திரைப்பட விழா 
செய்திகள்

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ரத்து

சீனாவின் மதிப்புமிக்க ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சீனாவின் மதிப்புமிக்க ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவ்விழாவின் 25வது பதிப்பு அடுத்த வருடம் நடைபெறுவதாக தகவல்   சொல்லப்படுகிறது.  

வழக்கமாக இவ்விழா ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் நடக்கும். கரோனா கட்டுப்பாடுகளால் இவ்வாண்டு நடத்தப்போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

“புதிய உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்புகளால் ஷாங்காய் ஜூனில் நடைபெறவிருந்த இவ்விழா அடுத்தாண்டு ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச திரைப்பட விழா குழுவிநர்கள் முடிவு செய்துள்ளோம். இத்திரைப்பட விழாவிற்கு வருகைபுரியும் அனைத்து ரசிகர்களுக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றியையும் ஆழ்ந்த சோகத்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒருவேளை கட்டுபாடுகள் அனுமதிக்கப்பட்டால் நிச்சயமாக இவ்வாண்டு இறுதியில்கூட விழாவை நடத்த தயாராக இருக்கிறோம் என்பதை திரைப்பட கலைஞர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்"  என விழாக் குழுவிநர் தெரிவித்தனர்.

ஜூன் 6 முதல் பெய்ஜிங்கில் சினிமா திரையரங்கில் 75%பார்வையாளர்களுக்கு மட்டும் அதுவும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என சொல்லப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயம்!

31 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பைக்குத் தேர்வான கஜகஸ்தான்!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் டிரம்ப்!

SCROLL FOR NEXT