செய்திகள்

''இதனால்தான் விஜய்யை 'ஐயா' என்று அழைக்கிறேன்'' - நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

DIN

நடிகர் விஜய்யை ஐயா என்று அழைத்ததன் பின்னணி குறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சூர்யா விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தப் படம் வெளியான 5 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவவேற்பு கிடைத்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் நடிகர் கமல் படம் என்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையைில் இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். 

மீண்டும் எப்பொழுது நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், முதலில் ரஜினிகாந்த்திடம் அனுமதி வாங்க வேண்டும், பிறகு இயக்குநர் லோகேஷிடம் அனுமதி வாங்க வேண்டும். நான் எப்பொழுதும் அவருடன் இணைந்து நடிக்க தயார்'' என்றார். 

அப்போது நடிகர் விஜய்யுடன் இணைவது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, விஜய்யுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சரியான கதை மற்றும் விஜய் தனது நாட்களைக் கொடுப்பதை பொறுத்தது என்றார். 

நடிகர் விஜய்யை விஜய் ஐயா, என்று அழைத்தது  குறித்து பேசுகிறார்கள். நடிகர் சிவாஜி கணேசன் என்னை கமல் ஐயா என்றுதான் அழைப்பார்.  பாசத்தின் காரணமாக அப்படி அவரை அழைத்தேன்'' என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT