முகப்பு
செய்திகள்

விரைவில் மன்சூர் அலிகானுடன் இணைவேன்: லோகேஷ் கனகராஜ்

நடிகர் மன்சூர் அலிகானுடன் விரைவில் இணைய உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
நடிகர் மன்சூர் அலிகான் (கோப்புப்படம்)
பகிர்:

நடிகர் மன்சூர் அலிகானுடன் விரைவில் இணைய உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், துணை இயக்குநர்கள் மற்றும் நடிகர் சூர்யாவிற்கு கமல்ஹாசன் பரிசுகளை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, "நடிகர் மன்சூர் அலிகானை உங்கள் படத்தில் பார்க்கலாமா? என ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதனைப் பகிர்ந்து ‘விரைவில்’ என பதில் அளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

கைதி திரைப்படத்தின் கதை முதலில் மன்சூர் அலிகானுக்காக எழுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →