படம்: டிவிட்டர், சன் பிக்சர்ஸ் | நித்யா மேனன் 
செய்திகள்

தனுஷுக்கு தோழியாக நடிக்கும் நித்யா மேனன்

மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு தோழியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாக இருக்கிறது.

DIN

மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு தோழியாக  நித்யா மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாக இருக்கிறது. 

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கயுள்ளனர். மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. 

இந்நிலையில் படக்குழு படத்தின் கதாபாத்திரங்கள் கடந்த புதன்கிழமை முதல் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது நித்யா மேனனின் கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்தனர். ஷோபனா என்பது இவரது பெயராக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஞ்சனி எனும் பெயரில் கிராமத்து தென்றலாக பிரியா பவானி ஷங்கரும், அனுஷ்கா எனும் பெயரில் பள்ளி தோழியாக ராஷி கண்ணாவும், பிரகாஷ் ராஜ் காவல்துறை அதிகாரி நீலகண்டனாகவும், பாரதிராஜா சீனியர் திருச்சிற்றம்பலமாகவும் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவி

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை

வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கான மூலோபாயம்: தில்லி கருத்தரங்கில் தமிழக ஆளுநா் எச்சரிக்கை

ஆன்லைனில் பகுதி நேர வேலை: வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT