செய்திகள்

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

நடிகர் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தகவல் தெரிவித்துள்ளது. 

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

தேமுதிகவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டணி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் விஜய் மில்டன் உறுதி செய்துள்ளார். மேலும், அவரது இருப்பு படத்தில் இருக்கும் என்பது போல தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணி அதிரடியாக விளையாட இவர்கள் இருவரும்தான் காரணம்: அஸ்வின்

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ‘பாஜகவின் அரசியல் விளையாட்டு’ -ஆளும் கம்யூ. விமர்சனம்

ரெட் அலர்ட்... சனம் ஷெட்டி!

கண் காணா அழகு... நபா நடேஷ்!

SCROLL FOR NEXT