செய்திகள்

'கடவுள் இசையமைக்கிறாரு...'' - இளையராஜா இசையமைக்கும் விடியோவை பகிர்ந்த தெலுங்கு இயக்குநர்

இளையராஜா தனது படத்துக்கு பின்னணி இசையமைக்கும் விடியோவை தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி பகிர்ந்துள்ளார். 

DIN

இளையராஜா தனது படத்துக்கு பின்னணி இசையமைக்கும் விடியோவை தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

பிரபல தெலுங்கு இயக்குநரான கிருஷ்ண வம்சி தற்போது ரங்க மார்த்தாண்டா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கிருஷ்ண வம்சியின் மனைவியும் நடிகையுமான ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். 

இந்தப் படம் மராத்தி படமான நட்சாம்ராட் படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா பின்னணி இசையயமைக்கும் விடியோவை கிருஷ்ண வம்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இசைக் கலைஞர்கள் வாசிக்கும் விடியோவை பகுதி பகுதியாக வெளியிட்ட கிருஷ்ண வம்சி, என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய, மதிப்பிற்குரிய சொத்து. எல்லா நல்ல செயல்களும் முடிவுக்கு வருவதுபோல பின்னணி இசையமைக்கும் பணியும் முழு திருப்திகரமாக முடிவடைந்தது. ஆன்மிக அனுபவம். கடவுள் வேலை பார்க்கிறார். என்று சில விடியோக்களை பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டையில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்

குடியரசு நாள்: புதுக்கோட்டையில் ஆட்சியர் அருணா கொடியேற்றினார்!

அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்: விஜய்

விழுப்புரத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்

தில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

SCROLL FOR NEXT