செய்திகள்

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' பட அரபிக் குத்து பாடல் புதிய சாதனை

நெல்சன் இயக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. 

DIN

நெல்சன் இயக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. 

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  இதனால் இயக்குநர் நெல்சன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

இதனையடுத்து இயக்குநர் நெல்சனுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர். விக்ரம் படம் குறித்த ஒரு பேட்டியின்போது நெல்சன் குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ், 'வெற்றி தோல்வி எல்லோருக்கும் வரும். எனக்கும்  கூட தோல்வி வரலாம். இதனை வைத்து ஒரு இயக்குநரை விமர்சிப்பது தவறு' என்று தெரிவித்திருந்தார். '

இதையும் படிக்க | 'கடவுள் இசையமைக்கிறாரு...'' - இளையராஜா இசையமைக்கும் விடியோவை பகிர்ந்த தெலுங்கு இயக்குநர்

பீஸ்ட் படம் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும், அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக அரபிக் குத்து வெளியாகி இந்திய அளவில் பிரபலமானது. இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்தனர். சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோக்களும் வைரலாகின. 

அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடினர். இந்தப் பாடலுக்க ரௌடி பேபி, புட்ட பொம்மா பாடல்களுக்கு நடனம் அமைந்த ஜானி அரபிக் குத்து பாடலுக்கும் நடனம் அமைத்திருந்தார். இந்த நிலையில் இந்தப் பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் அதிகாரிகள் பொறுப்பேற்பு

பென்னாகரத்தில் புதிதாக 7 நியாயவிலைக் கடைகள் திறப்பு

பக்கவாத தின விழிப்புணா்வு ஊா்வலம்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: பாஜகவினா் கண்காணிக்க வேண்டும்

சாத்தான்குளம் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT