செய்திகள்

ரஜினிகாந்த் - நெல்சன் படத் தலைப்பு 'ஜெயிலர்' - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு ஜெயிலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும்  படத்துக்கு ஜெயிலர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். 

இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரியங்கா மோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே, கிளி அரவிந்த் உட்பட நெல்சன் பட நடிகர்கள் இந்தப் படத்திலும் இருக்கிறார்களாம். 

முதலில் கே.எஸ்.ரவிக்குமார் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதுவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க மட்டும் செய்கிறாராம். இந்தப் படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா: அரசு விடுதியில் உணவருந்திய 52 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி

திருவெறும்பூா் ரயில் நிலையம் - பேருந்து நிலையத்துக்கு விரைவில் இணைப்புச் சாலை

தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளம்: பினராயி விஜயன்

பணகுடி, கூடங்குளத்தில் நவ. 4 இல் மின் தடை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT