செய்திகள்

14 நாடுகளில் தடை செய்யப்பட்ட குழந்தைகள் படம் : அப்படி என்ன அந்தப் படத்தில் தவறு?

லைட் இயர் என்ற அனிமேஷன் படத்துக்கு 14 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

DIN

லைட் இயர் என்ற அனிமேஷன் படத்துக்கு 14 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

தி டிஸ்னி பிக்சர் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பான லைட் இயர் என்ற படம் நேற்று (ஜுன் 17) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஆங்குஸ் மேக்லேன் இயக்கியுள்ள இந்தப் படத்தை உலகமெங்கும் உள்ள குழந்தைகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு மலேசியா மற்றும் சில முஸ்லிம் நாடுகள் என 14 நாடுகளில்  தடைவிதிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்த படத்தில் முத்தமிடும் காட்சிகள், தன்பாலின ஈர்ப்பாளர்களை ஆதரிக்கும் காட்சிகள் படத்தில் உள்ளதாம். 

முஸ்லிம் நாடுகளில் தன் பாலின ஈர்ப்பு என்பது மத நம்பிக்கைக்கு எதிரானதாகும். மேலும் குற்றமாகவும் கருதப்படுகிறது. எனவே அந்தக் காட்சிகளை நீக்கினால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதிக்கப்படும் என அந்நாடுகள் தெரிவித்ததாகவும், அதற்கு படக்குழுவினர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த நாடுகளில் படம் வெளியாகவில்லை. அமெரிக்காவிலும் இத்தகைய காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீலாது நபி, ஓணம்: தலைவா்கள் வாழ்த்து

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா் நம்பிக்கை

சாலைகள் அமைக்கும் பணி ஆய்வு

பயங்கர ஆயுதங்களுடன் இணையதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த இருவா் கைது

மாவோயிஸ்டுகளுடன் சண்டை: 2 வீரா்கள் வீரமரணம்

SCROLL FOR NEXT