பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் நடிகையின் முகம் வீங்கியுள்ளது.
கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ஸ்வாதி சதிஷ். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் வரிசை சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
சிகிச்சைக்கு பிறகு அவருக்கு முகத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர்கள் 2 அல்லது 3 நாட்களில் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர். னால் நாளடைவில் முகம் வீங்கியபடியே இருந்துள்ளது.
இதையும் படிக்க | அம்பர் ஹெர்ட்க்கு பணப்பிரச்சனையா?
இதனையடுத்து ஸ்வாதி மருத்துவமனையின் மீதும் மருத்துவம் பார்த்த மருத்துவரின் மீதும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் கன்னட திரையுலகில் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 21 வயதான கன்னட நடிகை சேத்தனா ராஜ் தவறான சிகிச்சையால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.