செய்திகள்

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு புதிய சன் டிவி தொடரில் நடிக்கும் நடிகர்

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சன் டிவி தொடரில் நடிகர் ராகவ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சன் டிவி தொடரில் நடிகர் ராகவ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சன் டிவியில் தொகுப்பாளராக, சின்னத்திரை நடிகராக கலக்கியவர் ராகவ். 90களின் குழந்தைகளுக்கு இவரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 

அதனைத் தொடர்ந்து ஏ நீ ரொம்ப அழகா இருக்க, ஜெர்ரி, வட்டாரம், சிலம்பாட்டம், எந்திரன், நஞ்சுபுரம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

மேலும் ஏ நீ ரொம்ப அழகா இருக்க படத்தில் ஒரு காதல் வந்துச்சோ பாடலுக்கும் நஞ்சுபுரம் படத்தில் அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு  சன் டிவியின் செவ்வந்தி என்ற தொடரில் நடிக்கவிருக்கிறார். இந்தத் தொடரை ஓ.என்.ரத்னம் இயக்கவுள்ளார். இந்தத் தொடரின் படப்பிடிப்பு கோபி செட்டிபாளையத்தில் உள்ள கொடிவேரி அணையில் படமாக்கப்பட்டுள்ளது. 

மேலும் கிராமத்திலுள்ள கணவன் மனைவி இடையேயைன காதல் கதையாக இந்தப் படம் உருவாகிறது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ராகவுக்கு ஜோடியாக மகராசி தொடரில் நடித்த திவ்யா நடிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT