செய்திகள்

'பீஸ்ட்' தோல்வி படமா? ரெட் ஜெயண்ட்டின் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் கோபம்

ரெட் ஜெயண்ட் அறிவித்த இந்த ஆண்டு வெற்றிபெற்ற படங்களின் பட்டியலில் பீஸ்ட் திரைப்படம் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

DIN

ரெட் ஜெயண்ட் அறிவித்த இந்த ஆண்டு வெற்றிபெற்ற படங்களின் பட்டியலில் பீஸ்ட் திரைப்படம் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த ஆண்டு எஃப்ஐஆர், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம் உள்ளிட்ட படங்களை தமிழக அளவில் வெளியிட்டது. 

இந்த நிலையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களது பணியாளர்களின் புகைப்படத்தைப் பகிர்ந்து, இவர்கள் தான் எஃப்ஐஆர், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி மற்றும் விக்ரம் படத்தின் பின்னணியில் இருந்தவர்கள். குழுவினருக்கு நன்றிகள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் பீஸ்ட் தவிர மற்ற படங்கள் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஏப்ரல் 14 புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் ரெட் ஜெயண்ட்டின் பதிவால் பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாகவும் தோல்விப் படமாக அமைந்துள்ளது உறுதியாகியுள்ளது. அதேப் போல எஃப்ஐஆர், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்துவருகிறது. வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனது பங்கு மட்டும் ரூ.75 கோடி கிடைத்துள்ளதாக உதயநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் பெரம்பலூா் மாவட்டத்தில் 3,789 போ் பயன்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

குழித்துறை பகுதிகளில் 4 நாள்கள் மின்தடை

ராகுல் காந்தியை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

கைவிடப்பட்ட குவாரி குட்டையில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT