ராதிகா எனக்கு அம்மா இல்லை என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி ஒன்றில் வரலட்சுமி சரத்குமாரிடம், ராதிகாவின் மகள் ரேயன் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வரலட்சுமி , ரேயன் தைரியமான பெண். இதனை அவர் எளிதாக எதிர்கொள்வார்.
என்னையும் நீங்கள் ஏன் ராதிகாவை அம்மா என கூப்பிடவில்லை என கேள்வி கேட்கின்றனர். ராதிகா என் அம்மா இல்லை. அவர் என் அப்பாவின் இரண்டாவது மனைவி. அவருடன் இணைந்து பணிபுரிவதில் எனக்கு மகிழ்ச்சி. எல்லோருக்கும் ஒரே அம்மாதான் இருக்க முடியும்.
எனக்கும் ஒரே அம்மாதான். ராதிகாவை நான் ஆண்டி என்றுதான் பேசுவேன். இருவரையும் சமமாக மதிக்கிறேன். ரேயனுக்கும் எனக்கும் வேறு வேறு அப்பா. அவருடைய அம்மா என் அப்பாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், என் அப்பா அவரையும் நன்றாக கவனித்துக்கொள்கிறார். ரேயனின் திருமணத்தை என் அப்பாதான் நடத்தினார் என்று அதிரடியாக தெரிவித்தார்.
வரலட்சுமி நடிப்பில் தமிழில் காட்டேரி, பாம்பன், யானை என அடுத்தடுத்து படங்கள் வெளியாகவிருக்கின்றன. இது தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகிவரும் சபரி, கன்னடத்தில் லகாம், தெலுங்கில் ஹனு மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.