விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது.
மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.