செய்திகள்

'பெண்ணைப் பற்றிய வதந்தி என்றால்...' - நாக சைதன்யா குறித்து தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு சமந்தா பதிலடி

நாக சைதன்யா குறித்து பரவும் வதந்திக்கு தான்தான் காரணம் என பரவும் வதந்திக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். 

DIN

நாக சைதன்யா குறித்து பரவும் வதந்திக்கு தான்தான் காரணம் என பரவும் வதந்திக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். 

கடந்த சில நாட்களாக நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சோபிதா என்பவரும் காதலித்துவருவதாகவும், இருவரும் ஒன்றாக நிகழ்வுகளில் பங்கேற்பதாகவும் தகவல்கள் பரவின. 

மேலும் இதுகுறித்து செய்தி வெளியிட்ட இணையதளம், நாக சைதன்யா - சோபிதாவின் காதல் குறித்து பரவும் செய்திகளுக்கு சமந்தாவின் குழு தான் காரணம் என்றும் இதனால் சமந்தா மீது நாக சைதன்யாவின் ரசிகர்கள் கோபத்தில் இருப்பதாகவும் என்றும் குறிப்பிட்டிருந்தது. 

அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சமந்தா,

''பெண்ணைப் பற்றிய வதந்தி - உண்மையாக இருக்கலாம். 

ஆணைப் பற்றிய வதந்தி - பெண் உருவாக்கியது 

வளருங்க. சமந்தப்பட்ட இருவரும் எப்பொழுதோ கடந்துசென்றுவிட்டார்கள். நீங்களும் கடந்து செல்லவேண்டும். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து கடந்து செல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெச்டிஎஃப்சி கடனளிப்பு 9% உயா்வு

8 நகரங்களில் மிதமாக அதிகரித்த வீடுகள் விற்பனை

விஜய் தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டாரா? டி.டி.வி. தினகரன் கேள்வி

குளியல் அறையில் இருந்து மீன் வியாபாரி சடலம் மீட்பு

மீண்டும் செயல்படத் தொடங்கியது அகிலேஷ் யாதவின் ஃபேஸ்புக் கணக்கு

SCROLL FOR NEXT