செய்திகள்

தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் - கடுமையாகும் போட்டி

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 

DIN

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 

டாக்டர், டான் படங்களின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற ஆங்கில நடிகை நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தை ஜதி ரத்னாலு என்ற வெற்றிப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்கியுள்ளார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

முதலில் இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விடியோவில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா, இயக்குநர் அனுதீப் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

ஏற்கனவே தீபாவளிக்கு அஜித் குமாரின் ஏகே 61, கார்த்தியின் சர்தார், ஜெயம் ரவியின் இறைவன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியாகவுள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களின் இலக்கு மிக உயா்ந்ததாக இருக்க வேண்டும்: ஆட்சியா்

தீபாவளி: திருப்பூரில் இருந்து 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஈரோடு விளையாட்டு விடுதி மாணவிக்கு 2 தங்கப் பதக்கம்!

பல்லடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஏடிஎம் மையத்தில் திருட முயற்சி: இளைஞா் கைது

SCROLL FOR NEXT