செய்திகள்

'வலிமை' இயக்குநர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது புகார்

வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் வினோத் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

DIN

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களின் ஆதரவால் நல்ல வசூலைப் பெற்றுவருவதாக கூறப்படுகிறது. 

வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வலிமை திரைப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்த நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சாந்தி என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 24 ஆம் தேதி வெளியான வலிமை படத்தை குடும்பத்துடன் பார்த்தேன். 

அந்தப் படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்திரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களை குற்றவாளிகள் போல காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.

ஒருசில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட, ஒட்டுமொத்த வழக்கறிஞர்களையும் தவறாக காட்டுவது ஏற்புடையது அல்ல. இதன் காரணமாக திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லக்னௌவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது

கடைசி ஒருநாள்: பெத் மூனி சதம் விளாசல்; இந்தியாவுக்கு 413 ரன்கள் இலக்கு!

மனசுக்குள்ளே.. ரவீனா தாஹா!

வண்ணப்பூவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

SCROLL FOR NEXT