செய்திகள்

''இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்'': வித்தியாசமாக அறிவித்த நடிகர்

DIN

நடிகர் நகுல் ஸ்ருதி தம்பதிக்கு ஏற்கனவே அகிரா என்ற பெண் குழந்தையுள்ள நிலையில், தற்போது ஸ்ருதி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாராம். இதனை நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

நடிகர் நகுல் - ஸ்ருதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு அகிரா என பெயரிட்டுள்ளனர். குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தனது மனைவி ஸ்ருதி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், ஜுன் மாதம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் மனைவி, மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நகுல் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். 

அந்தப் படங்களில் அவரது பெண் குழந்தை 'வருகிற ஜுன் 2022-ல் நான் மூத்த சகோதரியாகப் போகிறேன்' என்ற வாசகம் இடம்பெற்ற ஸ்லேட்டை வைத்திருக்கிறார். 

நடிகை தேவையானியின் இளைய சகோதரரான நகுல், இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். துவக்கத்தில் பருமானாக இருந்த நகுல், தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றிக்கொண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தில் கதாயகனாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. 

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார். தற்போது 'எரியும் கண்ணாடி' மற்றும் 'வாஸ்கோடகாமா' என இரண்டு படங்கள் நகுல் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும்

பூட்டிய வீட்டுக்குள் வயதான தம்பதி சடலமாக மீட்பு

போதைப்பொருள் விநியோகத்துக்கு இடைஞ்சல்: உணவில் விஷம் கலந்து நாய்கள் சாகடிப்பு

47-ஆவது ஏற்காடு கோடை விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT