செய்திகள்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் வடிவேலுவுடன் இணையும் ஷிவானி: ஜோடியாக நடிக்கிறாரா ?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஷிவானி நடிக்கவிருக்கிறார். 

DIN

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஷிவானி நடிக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், வடிவுலுவுடன் படத்துடன் கூடிய என்னைப் பற்றிய மீம்ஸ்கள் வெளியாவதிலிருந்து, தற்போது உண்மையாகவே இணைந்து நடிக்கிறேன். மாபெரும் நடிகரான வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் ரி்டர்ன்ஸ் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், வடிவேலுவின் மகளாக ஷிவானி நடிக்கவிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசைப் பணிக்காக லண்டன் சென்றிருந்தபோது நடிகர் வடிவேலுவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்கு பிறகு வடிவேலு குணமானதால் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: பாஜகவினா் கண்காணிக்க வேண்டும்

சாத்தான்குளம் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

பொதுமக்களுக்கு இடையூறு செய்தவா் கைது

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 415 மனுக்கள்

கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளிவிளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும்

SCROLL FOR NEXT