''இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல...'': சக நடிகரிடம் முகத்தில் அடி வாங்கிய கயல் நடிகை
சைத்ரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த விடியோ வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நாயகியாக நடித்து வருபவர் சைத்ரா. சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 10 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பதிவிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி வருகிறது.
சைத்ரா நடிகர் அஜித்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் பெண்ணாக சைத்ரா வலிமை படத்தில் நடித்திருந்தார். அவரது வேடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிக்க | சமீபத்தில் வெளியான படத்தை திரையரங்கில் பார்த்து விமர்சித்த தனுஷ் : ''என்னால் பேச முடியல''
Advertisement
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில், இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகும் விடியோவை நடிகர் அவினாஷுடன் முயற்சிக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அவினாஷ், அவரது முகத்தில் அடித்துவிடுகிறார். இதனால் அவர் தடுமாறி கீழே விழுகிறார்.