செய்திகள்

படப்பிடிப்புக்கு நடுவே மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன்: ''சினிமாவில் நடிக்கிறது...''

படப்பிடிப்புக்கு நடுவே மாணவர்களுடன் சிவகார்த்திகேயன் பேசும் விடியோ வைரலாகி வருகிறது. 

DIN


சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, புதுச்சேரி, லண்டன் போன்ற இடங்களில் நடைபெறவிருக்கிறது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. அப்போது பள்ளி விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.  

அப்போது பேசிய அவர், ''எல்லோருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. அதனை நீங்கள் முதலில் நம்பவேண்டும். நாமே நம்மை நம்பவில்லையென்றால், மற்றவர்கள் நம்மை நம்பவில்லை என சொல்வதில் அர்த்தம் இல்லை. 

எந்த திறமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். சினிமாவில் நடிக்கிறது மட்டும்தான் பெரிய விஷயம் இல்லை. அழகாக ஓவியம் வரைவது, நன்றாக பாடுவது, நம் மொழியை சிறப்பாக பேசுவது, எழுதுவது என திறமைகள் உங்களுக்குள் இருக்கிறது. அதனை சரியான நேரத்தில் தேடிக் கண்டுபிடித்துவிடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: 38 போ் கைது

விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

குழந்தை வேலப்பா் கோயிலுக்கு லிப்ட் வசதி

கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT