செய்திகள்

விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி': ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் இணைந்து தயாரித்துள்ள கடைசி விவசாயி, கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மணிகண்டன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க, ரிச்சர்டு ஹார்வி பின்னணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு இயக்குநர் மணிகண்டனே ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

இந்த நிலையில் இந்தப் படம் வருகிற 11 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விவசாயிகளின் நிலையை இந்தப் படம் யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. திரையரங்குகளில் அதிகம் கவனம் பெறமால் போன இந்தப் படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT