செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: வெளியான தகவல்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

DIN

தனுஷுடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது பாடல் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் பாடலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைக்கிறார். 

ஜானி நடனம் அமைத்துள்ள இந்தப் பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடல் நாளை (மார்ச் 8) மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. முசாஃபிர் என இந்தப் பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

அவரது பதிவில், கரோனாவுக்கு முன் மற்றும் பின்பான வாழ்க்கை. காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மகளிர் தின மாலையை மருத்துவர் பிரித்திகாவுடன் செலவழிக்கவிருக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் வசதிகள் தொடங்கிவைப்பு

கண்ணழகு... திரிஷ்யா!

ரூ.17,884.76 கோடி இழப்பை சந்தித்த இண்டிகோ நிறுவன பங்குகள்!

மயக்கும் மான்விழி அம்புகள்... மௌனி ராய்!

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

SCROLL FOR NEXT