செய்திகள்

தொடர்ச்சியாக விஜய் பட நடிகைகளுடன் ஜோடி சேரும் கவின் : வெளியான சுவாரசியத் தகவல்

DIN

நடிகர் கவின் தற்போது அடுத்ததாக நடிக்கும் படம் பூஜையுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துவங்கியது. இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத் குமார் தயாரிக்க, கணேஷ் கே பாபு இயக்குகிறார். 

இயக்குநர் கணேஷ் கே. பாபு 'தூங்கா நகரம்', 'கடாரம் கொண்டான்' படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வாவிடம் உதவி இயக்குநராக பணிபிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் 4வது படமாகும். 

இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். இந்தப் படம் தற்போதைய காலகட்ட காதலை சொல்லும் பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கிறதாம்.

இந்தப் படத்தில் வாழ் படத்தில் நாயகனாக நடித்த பிரதீப் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இவர் நடிகர் கவினின் நண்பர் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினின் விருந்தினராக வந்து அவரை அடித்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க, எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் நடிகர் கவின் தொடர்ந்து விஜய் பட நடிகைகளுடன் ஜோடி சேருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தில் பீஸ்ட் அபர்னாவுடன் இணைந்திருக்கும் கவின், முன்னதாக 'பிகில்' படத்தில் நடித்த அம்ரிதாவுடன் 'லிஃப்ட்' படத்திலும், அதே 'பிகில்' படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜானுடன் இணைந்து 'ஆகாஷ் வாணி' இணையத்தொடரிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT