மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குநர் பாலா : முடிவுக்கு வந்தது 17 ஆண்டு திருமண வாழ்க்கை
இயக்குநர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பாலா. தற்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
சேது மூலம் விக்ரமுக்கும், நந்தா மூலம் சூர்யாவுக்கும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுடன் இயக்குநர் பாலா இணைந்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க | தமிழ் சினிமாவில் துணை நடிகைகளுக்கு தொடரும் பாலியல் ரீதியிலான பிரச்னைகள்: தீர்வு என்ன?
Advertisement
Advertisement
முத்துமலர் என்பவரை கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா திருமணம் செய்தார். இந்த நிலையில் 4 ஆண்டுகளாக அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இதன் காரணமாக தனித்தனியே வசித்துவந்துள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் கடந்த மார்ச் 5 ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் மனப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். அவர்களுக்கு பிரார்த்தனா என்ற பெண் குழந்தையுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.