அம்மா, சித்தியுடன் நடிகர் அஜித்தின் மகள்: இவ்வளவு வளர்ந்துட்டாங்களே !
ஷாலினி மற்றும் ஷாமிலியுடன் அனோஷ்கா அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வலிமையைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கும் படத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருக்கிறார். ஏகே 61 என்று அழைக்கப்படும் இந்தப் படத்தின் பூஜை இன்று(மார்ச் 9) நடைபெற்றதாகவும், வருகிற 19 ஆம் தேதி முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்துக்காக நடிகர் அஜித் 35 கிலோ வரை எடை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக்குடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட குடும்பப்படம் இணையதளங்களில் வைரலானது. இந்தப் புகைப்படத்தில் நடிகர் அஜித் இருக்கும் தோற்றத்தில்தான் ஏகே 61 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஷாலினியின் தங்கையான நடிகை ஷாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரி ஷாலினி மற்றும் அனோஷ்காவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ''என்னுடைய பெண்களுடன் ! மகளிர் தின வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ரஷியாவுக்கு எதிரான போரில் மக்களைக் காக்க சண்டையிட்ட உக்ரைன் நடிகர் மரணம்: சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
திருமண நிகழ்வு ஒன்றில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தப் படத்தில் ஷாமிலியின் உயரத்திற்கு சமமாக அனோஷ்கா இருக்கிறார். இதனையடுத்து மூவரும் அக்கா தங்கைகள் போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.