பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவம் தயாரித்து வருகிறது. படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
கடந்த பிப்.14ஆம் தேதி காதலர் தினத்தன்று பீஸ்ட் படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்பாடல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. திரைப்பிரபலங்கள் தொடங்கி பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி இணையதளங்களில் விடியோ பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் இதுவரை 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.