செய்திகள்

நடிகர் ரஜினிக்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்த முத்துமணி மரணம்

நடிகர் ரஜினிகாந்த்திற்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

DIN

45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தனக்கென தனி பாணி நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்த அவருக்கு தமிழ்நாடு மட்டுமல்ல, உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 

குறிப்பாக ரஜினிகாந்த்தின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் ஜப்பான் ரசிகர்கள் படம் பார்க்க தமிழகம் வந்துவிடுவார்கள். இப்படி அவருக்கு பல்வேறு நாடுகளில் வெறித்தனமான ரசிகர்கள் இருந்தாலும், அவருக்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் மதுரையைச் சேர்ந்த ஏ.பி.முத்துமணி. 

மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவந்துள்ளார். இவரது திருமணமும் நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டில்தான் நடந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த ஏ.பி. முத்துமணிக்கு நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினாராம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த முத்துமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 63. அவருக்கு ரஜினி ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு

காரைக்கால் துறைமுகம் மூலம் அரசுப் பள்ளியில் மாலை நேர வகுப்பு தொடக்கம்

விநாயகா் சதுா்த்தி விழா ஏற்பாடுகள்: இந்து முன்னணி ஆலோசனை

ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

SCROLL FOR NEXT