செய்திகள்

ரஷியாவுக்கு எதிரான போரில் மக்களைக் காக்க சண்டையிட்ட உக்ரைன் நடிகர் மரணம்: சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

DIN


போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் மக்களைப் பாதுகாக்கும் விதமாக  உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 33 வயதான நடிகர் பஷா லீ என்பவர் ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷிய ராணுவ வீரர்களால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கடைசி பதிவில், ''கடந்த 48 மணி நேரத்தில் எங்கள் நாட்டில் எப்படி குண்டு வெடிக்கிறது என்பதை அமைதியாக உட்கார்ந்து புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாங்கள் சிரிப்பதற்கு, எங்களால் இதனை சமாளிக்க முடியும் என்பதே காரணம். உக்ரனை மக்களே நாங்கள் இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இப்படி பதிவிட்டு அடுத்த நாளே ரஷியா ராணுவத்தினரால் கொல்லப்பட்டது மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT