நடிகை சமந்தா நடிப்பில் தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மேலும், டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக தமிழில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
மேலும் அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என்ற ஆங்கிலப் படத்தில் இருபால் ஈர்ப்பாளராக சமந்தா நடிக்கவிருக்கிறார். இந்த செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் நடிகை சமந்தா தனது கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு நாக சைதன்யாவின் உறவினரும் நடிகர் வெங்கடேஷின் மகளுமான ஆர்ஷிதா ஹார்ட் ஸ்மைலியை கமெண்ட் செய்துள்ளார். வெங்கடேஷின் சகோதரி மகன்தான் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.
நாக சைதன்யாவும் சமந்தாவும் மனப்பூர்வமாக பிரிந்த நிலையில் நாக சைதன்யாவின் உறவினரான ஆர்ஷிதாவின் கமெண்ட்டுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.