செய்திகள்

ஹிந்தி நடிகருடன் அரபிக் குத்து பாட்டுக்கு ராஷ்மிகா நடனம்

பீஸ்ட் அரபிக் குத்து பாடலுக்கு ஹிந்தி நடிகர் வருண் தவானுடன் ராஷ்மிகா நடனமாடிய விடியோ வைரலாகி வருகிறது. 

DIN

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திலிருந்து கடந்த பிப்ரவரி 14, காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான அரபிக் குத்து பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வெளியான சிறிது நாட்களிலேயே 15 கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 

இந்தப் பாடலுக்கு இந்திய அளவில் பிரபலங்கள் நடனமாடி விடியோ பகிர்ந்து வருகின்றனர். நடிகை ராஷ்மிகா தற்போது ஹிந்தியில் வருண் தவானுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் அரபிக் குத்து பாடலுக்கு ராஷ்மிகாவும் வருண் தவானும் நடனமாடியுள்ளனர். இந்த விடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ராஷ்மிகா ஹிந்தியில் அமிதாப் பச்சனுடன் இணைந்து குட்பை படத்தில் நடித்துள்ளார். அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா நடித்திருந்த புஷ்பா திரைப்படம் தேசிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்துக்கும் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவைக்காய்

முல்லைச் சரம்... ஷெஹானாஸ்!

பூவே பூச்சூடி... ஷபானா!

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!

பாயும் ஒளி நீ... ராஷி சிங்!

SCROLL FOR NEXT