செய்திகள்

''பயமுறுத்தாதீங்க'': சமந்தாவை பாதுகாப்பாக அழைத்து சென்ற நடிகர்: வைரலாகும் விடியோ

சமந்தாவை பத்திரிகையாளர்களிடம் இருந்து நடிகர் வருண் தவான் பாதுகாப்பாக அழைத்து செல்லும் விடியோ வைரலாகி வருகிறது. 

DIN

நடிகை சமந்தா தற்போது 'ஃபேமிலி மேன்' தொடர் இயக்குநர்களின் அடுத்த இணைய தொடரில் நடிக்கவிருக்கிறார். இந்தத் தொடரில் ஹிந்தி நடிகர் வருண் தவானும் நடிக்கவிருக்கிறார். 

இந்த தொடர் குறித்த பணிகளுக்காக சமந்தா மும்பை சென்றுள்ளார். அவருடன் வருண் தவானும் வந்துள்ளார். அப்போது பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் சமந்தாவை சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பினர். இதனால் சமந்தாவிற்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. 

அப்போது நடிகர் வருண் தவான், 'அவரை பயமுறுத்தாதீர்கள்' என பத்திரிகையாளர்களிடம் கூறி சமந்தாவை பாதுகாப்பாக அழைத்து சென்றார். இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து நடிகர் வருண் தவானுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

'புஷ்பா' படத்தில் சமந்தா நடனமாடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் தேசிய அளவில் பெரும் வெற்றிபெற்றது. மேலும் 'தி ஃபேமிலி மேன் 2' தொடரில் சமந்தாவின் நடிப்பும் வட இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதன் காரணமாகவே சமந்தாவிற்கு பத்திரிகையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சமந்தா குறித்த செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT