செய்திகள்

மனைவியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த ரஹ்மான்: இதுதான் காரணம்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

DIN

ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி சாய்ரா பானுவுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, 'ஒன்றாக இருக்கும் கலை' என குறிப்பிட்டுள்ளார். திருமண நாளை முன்னிட்டு அவர் இந்தப் படத்தை பகிர்ந்துள்ளார். 

இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

'கோப்ரா', 'அயலான்', 'இரவின் நிழல்', 'வெந்து தணிந்தது காடு', 'பொன்னியின் செல்வன்', 'மாமன்னன்' என அடுத்தடுத்து தமிழ் ரசிகர்களுக்கு ரஹ்மான் இசை விருந்து படைக்கவிருக்கிறார். மேலும் மூப்பில்லா தமிழே தாயே என்ற தமிழகத்தின் பெருமைகளை சொல்லும் பாடல் ஒன்றையும் ரஹ்மான் வெளியிடவிருக்கிறார். 

சிறிது நாட்களுக்கு முன்பாக துபையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவிற்கு இளையராஜா சென்றிருந்ததார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரஹ்மான் பகிர்ந்து, எங்கள் ஸ்டுடியோவில் இளையராஜா இசையமைப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்க, அதற்கு கோரிக்கை ஏற்கப்பட்டதாக இளையாராஜா பதிலளித்தார். இது இசை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

முதல் வீரராக மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டரை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

தொடர் சர்ச்சையில் நிதீஷ்! மனநலன் குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!!

புரமோஷன்களுக்கு ஏன் வருவதில்லை? கோபமடைந்த யோகி பாபு!

SCROLL FOR NEXT