செய்திகள்

கமலின் பிறந்த நாள் வாழ்த்து: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கம்

பிறந்த நாளுக்கு நன்றி தெரிவித்த கமல் ஹாசனுக்கு உருக்கமான விதத்தில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

DIN

பிறந்த நாளுக்கு நன்றி தெரிவித்த கமல் ஹாசனுக்கு உருக்கமான விதத்தில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், அர்ஜுன் தாஸ், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம், நரைன் போன்றோர் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கும் படம் என்பதால் விக்ரமுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இசை - அனிருத், ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன். 

இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் என்பதால் விக்ரம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3 அன்று வெளியாகும் இப்படத்தின் மேக்கிங் விடியோவும் இன்று வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ட்விட்டர் வழியாக நள்ளிரவே லோகேஷுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் கமல் ஹாசன். ரசிகராகத் தொடங்கி இயக்குநராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் லோகேஷுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்றார். இதற்குப் பதில் அளித்த லோகேஷ் கூறியதாவது: இதைவிட சிறந்த பிறவிப்பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே என்று உருக்கமான விதத்தில் பதில் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT