விஜய் சேதுபதி / விமல் 
செய்திகள்

விஜய் சேதுபதி திரைக்கதை, வசனத்தில் விமல்: புதிய அப்டேட் வெளியானது

நடிகர் விஜய் சேதுபதி திரைக்கதை வசனம் எழுத நடிகர் விமல் நடிக்கும் குலசாமி திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் விஜய் சேதுபதி திரைக்கதை வசனம் எழுத நடிகர் விமல் நடிக்கும் ’குலசாமி’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி கதையில் நடிகர் விமல் நடிக்கவுள்ளதாக கடந்த 2020ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கியது.

கரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனிடையே அவ்வபோது வழங்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. 

இத்திரைப்படத்தை பில்லா பாண்டி திரைப்படத்தை இயக்கிய ஷரவண ஷக்தி இயக்குகிறார். அவரது கதைக்கு நடிகர் விஜய் சேதுபதி திரைக்கதை எழுதி, வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். 

நடிகர் விஜய் சேதுபதி இதற்கு முன்பு ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தில் வசனம் எழுதியிருந்தார். அந்த படத்தை பிஜு விஸ்வநாத் இயக்கியிருந்தார். ஆனால் குலசாமி படத்திற்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். 

இயக்குநர் ஷரவண ஷக்தி விஜய் சேதுபதியின் மாமனிதன், தர்மதுரை, க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

காளியம்மன்பட்டி அரசுப் பள்ளியில் ரூ.1.52 கோடியில் வகுப்பறைகள்

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

SCROLL FOR NEXT