‘ஜாலியோ ஜிம்கானா’: பீஸ்ட் திரைப்படத்தின் புதிய அப்டேட் 
செய்திகள்

‘ஜாலியோ ஜிம்கானா’: பீஸ்ட் திரைப்படத்தின் புதிய அப்டேட்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் அடுத்த பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் அடுத்த பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தை இயக்கவிருப்பதால் பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் பலரின் விருப்பத்தைப் பெற்ற இந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு புதன்கிழமை வெளியிட்டது.

நடிகர் விஜய் பாடியுள்ள ஜாலியானோ ஜிம்கானா பாடலானது மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் கு.கார்த்திக் பாடல் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

SCROLL FOR NEXT