செய்திகள்

தனது மகள் ஐஸ்வர்யாவின் பாடலை வெளியிட்டு வாழ்த்திய ரஜினிகாந்த்: ரசிகர்கள் நெகிழ்ச்சி

தனது மகள் ஐஸ்வர்யாவின் பாடலை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். 

DIN

நீண்ட இடைவேளைக்கு பிறகு பாடல் ஒன்றை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் பாடல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைத்துள்ளார். 

தமிழில் பயணி எனத் துவங்கும் இந்தப் பாடலை அனிருத் பாட, ஜானி நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இந்தப் பாடல் தற்போது இந்தப் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் இந்தப் பாடலை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். 

பாடல் குறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,  ''கடந்த 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக என் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் பயணி பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி.  அவருக்கு எனது வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மலையாளத்தில் யாத்ராகாரன் என்ற பெயரிலும், தெலுங்கில் சஞ்சாரி என்ற பெயரிலும் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் அல்லு அர்ஜுனும் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளனர். 

இதனையடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் லாரன்ஸுடன் இருக்கும் படத்தைபகிர்ந்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT